கொரோனா வைரஸ் தொற்று மென்மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையிலும் கொரோனா வேலைத்திட்டங்களுக்கு அமைவாகவும் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள முகத்துவாரம் ஆற்று வாய்ப் ஆற்று பகுதியில் மட்டி எடுப்பதற்கு சென்ற மீனவர் ஒருவர் நேற்று காணாமல் போன நிலையில் இன்று (30) ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதலாவது டோஸ் அஸ்டிராஜெனேகா வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸினை வழங்கமுடியாத நிலையேற்பட்டால் அவர்களிற்கு முதலாவது டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 45 பேருக்கு இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாட்டு விதிமுறை மற்றும் சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாகப் பின்பற்றினால் இன்னும் இரண்டு வாரங்களில்கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக் கூடும்.” இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…
கிளிநொச்சியில் சாந்தபுரம் கிராமம் நேற்று தொடக்கம் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மை நாட்களாக அப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த சூழ்நிலையிலேயே அப்பகுதி முடக்கப்பட்டது. சாந்தபுரம் கிராமத்தில் 780 குடும்பங்களைச் சேர்ந்த 2428 பேர் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.