ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அடுத்த கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிப்பதா? அல்லது அதிகரிப்பதா? என்பது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்தார்.
ஆங் சான் சூகி வீட்டை ராணுவ வீரர்கள் சோதனையிட்டபோது, கடத்தல் கருவிகளைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 2 தவணை தடுப்பூசியை 62.4 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், மத்திய பிரதேசம், குஜராத், கேரள மாநிலங்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதில் முன்னணியில் உள்ளன.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெட்டி வைத்துள்ள கரும்புகள், இன்னும் வெட்டப்படாத கரும்புகள் ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக அதிகபட்ச விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மன நிலையை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.