தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நதநில் ஹக்கின் சன்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
தி.மு.க. நிர்வாகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகளை ஒதுக்குவது தொடர்பாக பேசி வருகிறார்கள் என முத்தரசன் கூறியுள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் ஞாயிறு முன்னிணியின் பேரணி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும் , தமிழ் மக்களையும்,புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி என்னவென கேட்க விரும்புகின்றேன் என தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.