இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் ஞாயிறு முன்னிணியின் பேரணி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும் , தமிழ் மக்களையும்,புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி என்னவென கேட்க விரும்புகின்றேன் என தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக பயன்படுத்த ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என்று அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
இங்கிலாந்து நாட்டில் கொரோனா பரவலும், ஒமைக்ரான் ஆதிக்கமும் குறைந்து விட்டது. இதன் காரணமாக கட்டுப்பாடுகளை ரத்துசெய்வதற்கு அங்குள்ள போரிஸ் ஜான்சன் அரசு முடிவு எடுத்தது