ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கடிதம் எழுதிய நிலையில் இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களில் உள்ள பல பாடசாலைகளில் அதிபர்கள் ஏழு வருடங்களைக் கடந்தும் இடமாற்றம் வழங்கப்படாது தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றனர் எனப் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய அதிபர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, கல்வி சமூகத்தினரும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமையை எதிர்த்து, அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை என்றாலும் அமைச்சு பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.