இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் சுமார் 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று (23) கையளித்தது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 22 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல என அக்கட்சி அறிவித்துள்ளது.