தென்னவள்

மரவள்ளிக்கிழங்கும் தேனீரும்:முள்ளிவாய்க்காலில் அதுவும் இல்லை

Posted by - April 10, 2022
இலங்கையில் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அவித்த மரவள்ளிக்கிழங்கும் சுடச்சுடத் தேநீரும் வழங்கப்பட்டது. பால்மா தட்டுப்பாடு மற்றும் கோதுமை மா தட்டுப்பாட்டால் இத்தகைய உணவுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    
மேலும்

போராட தயார் :முன்னணி சார்பில் மணிவண்ணன்!

Posted by - April 10, 2022
கொழும்பில் ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரி போராடினால் நாமும் தெருத்தெருவாக இறங்கி போராட தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
மேலும்

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

Posted by - April 10, 2022
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

அரசாங்கத்தில் இருந்த விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சஜித்

Posted by - April 10, 2022
இன்று (10) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு முன்னதாக, அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் மற்றுமொரு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

ஆலையடிவேம்பில் வீடு ஒன்றை உடைத்து பெருமளவு தங்க ஆபரணம் கொள்ளை

Posted by - April 10, 2022
அம்பாறை – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீடு ஒன்றின் கதவை உடைத்து அங்கிருந்த 3 தாலிக்கொடிகள் உட்பட 54 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

எம்மை விழுங்க உருவாக்கிய அசுரன் உருவாக்கியவர்களை விழுங்கி வருகிறான்

Posted by - April 10, 2022
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருப்பது 69 லட்சம் வாக்குகளை வழங்கிய மக்கள் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

சதொசவில் பொருட்கள் இல்லை: பொதுமக்கள் எதிர்நோக்கப்போகும் சிக்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Posted by - April 10, 2022
அரசியல் போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் உண்மையான பிரச்சினைகளை மறக்கின்றனர் என மக்கள் உரிமை பாதுகாப்பு மன்றத்தின் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும்

சித்தங்கேணியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை

Posted by - April 10, 2022
வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்க பயணத்தை இரத்துச் செய்த பசில்

Posted by - April 10, 2022
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது அமெரிக்க பயணத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
மேலும்

கோட்டாபயவிற்கு எதிராக சூனியம் வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

Posted by - April 10, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால்  பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள  நிலையில், நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
மேலும்