இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதன் காரணமாக, நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மூன்று சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களுக்கான வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று (18) எடுத்துக் கொள்ளப்பட்டது.
300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், நாளை மறுதினம் (20) முதல் ஒரு வார காலத்துக்கு நாடு முழுவதும் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் இலங்கை பொறியியலாளரான பிரியந்த குமார அடித்துப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 6 பேருக்கு பாகிஸ்தானின் லாகூரிலுள்ள நீதிமன்றம், மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் ஆட்சியினை ஒரு வருடத்துக்கு தமிழ்தரப்புக்கு வழங்குமாறு சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என்று தெரிவித்தார்.