உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதத்தை நெருங்குகிறது. போரில் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு நவீன போர் ஆயுதங்களை அமெரிக்கா அளிக்கிறது. எதிரிகளின் இலக்குகள் மீது மோதி வெடிக்கும் அதிநவீன டிரோன்களும் இதில் அடக்கம்.
முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா தெரிவித்தார்.
கரைச்சி பிரதேச சபை அமர்வில் யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தாக்கப்பட்டமை மற்றும் றம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஆகியவற்றை கண்டித்து பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.