உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 60 நாளுக்கு மேலாகிறது. ரஷிய படை தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்துவருகிறது. ஆனாலும் உக்ரைன்மீது ரஷியா கடந்த சில தினங்களாக தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தனிநபர் விருப்பம் என்று வாதிடுபவர்கள், அடுத்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்வதில்லை என்று டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் பிஸ்மன் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் பதவி விலகா விட்டால் , பாரிய மக்கள் அலையை கொழும்பில் திரட்டி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான கொள்வனவு செயன்முறையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதுடன், இதற்காக ஒரு உப குழுவையும் நியமித்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க விரும்பவில்லை என்றால், தற்போதைய அரசாங்கத்தை வேறு வழிகளில் கவிழ்க்க வேண்டி ஏற்படும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதைய அரசாங்கம் கவிழும் வரை எதிர்க்கட்சிகள் ஓயாது என்றார். கொழும்பில்…
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என, பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்கர்கள் அண்மையில் கூட்டாக கடிதமொன்றை வெளியிட்டிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.