வீட்டுக்குத் தேவையான மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை தனது நாணயக்கொள்கை நடவடிக்கைகளை கடுமையாக்குமாறும் அதன் கடன் நெருக்கடிகளை சமாளிக்க வரிகளை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் துறைகளின் இயக்குனர் ஆன் மாரி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.சுபியானுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
உண்மையிலேயே இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது ஒரு பயங்கரமாதொரு சட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.