மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நுங்கு வெட்டுவதற்காக வெற்றுக்காணி ஒன்றிற்குச் சென்ற இளைஞர்கள் சிலர் இந்த வெடி பொருட்களைக் கண்டுள்ளனர். அதன்பின்னர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த வெடிபொருட்கள் மீட்பதற்கான…
த ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதுடன் மே18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஸ்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 26 வது பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர் ரணில் விக்ரமசிங்க நாளை முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இலங்கை தற்போது எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடியின் உண்மையான நிலைமைகள் மற்றும் நெருக்கடிக்கு தீர்வு கண்டு, இலங்கையை மீண்டும் பொருளாதார…
வருமானத்தின் ஒரு பகுதியல்லாதது என சந்தேகிக்க முடியுமான, ; ஒரு தொகை டொலரை உண்டியல் முறையினூடாக பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்டதாக கூறி கறுப்புப் பண சுத்திகரிப்பு குற்றச்சாட்டின் கீழ் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.