இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ‘வந்தாரா’ வனவிலங்குப் பூங்காவை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசா வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்து வரும் நிலையில், குறித்த தாகுதல் தவறுத்தலாக நடந்த ஒரு “துயரமான விபத்து” என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில், மெல்போர்னிலிருந்து கிட்டத்தட்ட 200 மைல் வடகிழக்கே உள்ள போர்பங்கா (Porepunkah) கிராமப்புறப் பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மலையக மக்களை ‘மலையக தமிழ் மக்கள்’ என அரசியல் ரீதியாக அங்கீகரிப்பது, அந்த சமூகத்திற்கு ஒரு மரியாதை, அங்கீகாரம் மற்றும் பெருமையைக் கொடுக்கும் செயலாகும். அதற்கான நடவடிக்கைகள் இனியும் தாமதப்படுத்தப்பட மாட்டாது என உறுதியளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சகலரும் சட்டத்தின் முன் சமமானவர்கள்.எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. ஊழல் மோசடியாளர்கள்,அரச நிதி முறைகேடாக பயன்படுத்தியவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவேன். இது அரசியல் பழிவாங்கலல்ல .சட்டவாட்சியை கடுமையாக அமுல்படுத்த எடுத்துள்ள தீர்மானங்களை இடைநிறுத்த போவதில்லை. கூச்சலிடுபவர்கள் முடியுமானவரை கூச்சலிடட்டும்,…
கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.
ஆட்சியில் உள்ள தரப்பு எதிர்க்கட்சிக்கு சென்றவருடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகுவது இலங்கையின் அரசியல் கலாசாரம்.நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை.இனியும் பழிவாங்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணையவில்லை.ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு உறுதியான மற்றும் நிச்சயிக்கப்பட்ட சட்டமேதும் தற்போது கிடையாது.சட்டமியற்றும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஜனநாயக முறைமைக்கமைய தேர்தலை நடத்த முழுமையாக ஒத்துழைப்போம்…