அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். இது குறித்து தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலகங்களில் பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவணக் கோப்புகள் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் துறை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வளி மாசுபாட்டுக்கு காலநிலை மாற்றத்தால் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் காரணமாக அமைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுற்றுப்புற வளி மாசுபாடு ஆண்டுக்கு 4.5 மில்லியன் அகால மரணங்களை ஏற்படுத்துவதாக உலக…