ரஷ்யா உருவாக்கி உள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி, அதில் பிரதமர் மோடியை பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் வாக்குத் திருட்டு நடைபெறும் சூழல் உருவாகியிருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் இந்த முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதாள குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள். போதைப்பொருள் வியாபாரத்துக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் உறுதியாக அறிந்துக்கொள்வார்கள் என வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
மலையக அபிவிருத்தி அதிகார சபை அல்லது பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை குறித்து இன்று மாபெரும் சர்ச்சை எழும்பியுள்ளது. இந்த அபிவிருத்தி அதிகார சபையானது நீர்த்துப்போக செய்து அதை பெருந்தோட்ட சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் ஒரு பகுதியாக…
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோடிக்கப்பட்ட சாட்சியை அடிப்படையாகக் கொண்டு கடற்படையின் முன்னாள் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார் என்று உதய கம்மன்பில குறிப்பிட்டதால் இனங்களுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. அரசியல் பழிவாங்கலுக்காகவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
நட்டமடைந்துவருவதாக 33 அரச நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளபோதும் அந்த நிறுவனங்களின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை. அதேநேரம் இது குறி்த்து மக்களை அறிவூட்ட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
வாளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரனுடன் இணைந்து மீண்டும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.