ஹட்டன் – சாஞ்சிமலை பகுதியில் மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி ஒருவர் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி, தெகித பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மீனவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கற்கோவளம் சந்தைக்கு அண்மித்த…
ஐ.டி. துறையில் உலகம் முழுவதிலும் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சர்வதேச தமிழ் பொறியாளர்கள் சங்கத்தின் முதல் மாநாடு மற்றும் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதன்…
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். பின்னர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறார்.
திண்டிவனத்தில் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. மேலும் அலுவலகத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் – மயிலம் சாலையில் உள்ள வன்னியர் சங்கம் தலைமை…
தமிழகத்தில் வகுப்புவாதிகளால் சாதி பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி வகுப்புகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார். ஆரோவில் அறக்கட்டளை சார்பில், ‘இந்திய குடியரசின் சாதனை கள், சவால்கள் மற்றும் வருங்கால திட்டங்கள்’ எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் புதுச்சேரி…
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய தீவிரமாக முயற்சித்துவரும் பால்கன் நாடான அல்பேனியா, தனது அரசாங்கத்தில் ஊழலை ஒழிப்பதற்காக, உலகில் முதல் முறையாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சரை நியமித்துள்ளது.