அநுராதபுரம் கவரக் குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டி சில்லுக்குள் அகப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் கவரக் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூடைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை…
ஆவடி பேருந்து முனையத்தை நவீனப்படுத்தி புதிய பேருந்து முனையமாக மாற்றும் பணி தொடங்கியுள்ளதால், இங்கிருந்த பேருந்து முனையம் செப்.14-ம் தேதி (இன்று) முதல், 100 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்யப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற வாக்குறுதிகள் என்னவாயிற்று, மக்களின் குரல் கேட்கிறதா முதல்வரே என்று திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
ஒரு கவுன்சிலர், எம்எல்ஏ கூட தவெகவில் கிடையாது. எனவே, பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் பல்கலை ஒன்றில் கல்விக்கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அங்கு கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.