துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணித்தனர். இந்நிலையில், நடுவானில் சென்றபோது விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது.…
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள வெடிபொருள் உற்பத்தி ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு கிடைத்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கும் பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிறுத்தினார்.
தென்னிந்தியாவின் முக்கிய காலை உணவான இட்லிக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள். பொதுவாக உலக இட்லி தினத்தன்று (மார்ச்.30) இத்தகைய டூடுல் வெளியிடப்படுவது வழக்கம், ஆனால், தொடர்பே இல்லாது அக்.11 அன்று இட்லிக்கு டூடுல் வெளியிடப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அன்னதானம் வழங்கினார். மேலும், மாவட்ட அதிமுக சார்பில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பி இருக்கும் நிலையில், ராமதாஸுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையே தொடங்கப்படாத நிலையில், ராஜபாளையத்துக்கு அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளராக கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட பாஜக மாநில துணைத் தலைவர் கோபால்சாமி அதை அறிவிக்கும் முன்பாகவே தொகுதிக்குள் ஆதரவு திரட்ட ஆரம்பித்துவிட்டார்.