சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக அதிகளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், நாடளாவிய ரீதியில் பொதுமக்களுக்கு சுனாமி விழிப்புணர்வு குறித்த ஒத்திகை பயிற்சியை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் இளைய ஊழியர்கள் இன்று சனிக்கிழமை (25) காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை அரைமணிநேரம் பணியிலிருந்து விலகி, கருப்புப் பட்டி அணிந்து வைத்தியசாலை முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹெரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பெண்கள் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று (25) சனிக்கிழமையுடன் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர்.
வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் நாட்டின் கிழக்கு ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை 12.00 மணி முதல் அடுத்த 24 மணி…
கனடா அஞ்சல் துறை கடந்த 2017 முதல் தீபாவளி கருப்பொருள் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான புதிய தபால் தலையை வெளியிட்டுள்ளது.