அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் பின்னணியில் ரஷியாவின் தலையீடு குறித்த விசாரணையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜப்பானின் ஸாமா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2 மனித தலைகள் உள்ளிட்ட 9 சடலங்களை போலீசார் கைப்பற்றியதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மறுத்து உள்ளனர்.
சீனாவின் வறட்சி நகரமான ஜிங்ஜியாங்கிற்கு பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து தண்ணீரை திருப்பி விட ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்தில் புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசு ஸ்டேடியங்களை பராமரிப்பு செய்வதற்காக நடைப்பயிற்சி மற்றும் விளையாட வரும் பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று முடிவு எடுத்து நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுத்துள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புபணியை மேற்கொள்ள 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.