தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (17.04.2018) யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியிலுள்ள திண்மக் கழிவுகள் தரம்பிரிக்கும் இடம் மற்றும் காக்கைதீவிலுள்ள திண்மக் கழிவுகள் மீள்சுழற்சி நடைபெறும் இடங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30 வருட நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலயிலுள்ள அவரது நினைவாலயம் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சவணபவன், பிரதி மேயர் எஸ்.சத்தியசீலன் மற்றும் உறுப்பினர்களால் நேற்று (17) காலைசிரமதானம் செய்யப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கொள்கை, சனநாயகத் தன்மை இல்லாத காரணத்திலேயே அக்கட்சியின் அக்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசுக்கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மருத்துவ சபையின் அனுமதியற்ற மருத்துவர் ஒருவர் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்வதாகத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கராப்பிட்டிய மருத்துவமனை கிளை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் சசிகலாவை ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன் என்று ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் அளித்த வாக்குமூலம் ஆணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்துகிறார் என்ற புகார் விஸ்வரூபம் எடுத்து நிலையில் தமிழக ஆளுநர் அது குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்தார். ஆளுநரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.