தென்னவள்

கடலில் குளிக்கச்சென்ற 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி!

Posted by - December 23, 2018
கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  தாளையடி வடமராட்சி கிழக்கை சேர்ந்த 46 வயதுடைய  அருளானந்தம் ஜோன்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையென…
மேலும்

பழைய மன்னார் வீதி மூடப்பட்டது!

Posted by - December 23, 2018
ஆனகமுவ மற்றும் தெதுருஓயா ஆகியனவற்றில் ஏற்பட்ட வௌ்ளத்தினால், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனால், பழைய மன்னாள் வீதியில், எழுவக்குளம் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும்

பொலிஸார் சுயாதீனமாக செயற்படுகின்றனர்!

Posted by - December 23, 2018
ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப இலங்கை பொலிஸார் செயற்படுவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  நல்லாட்சி அரசாங்கத்தில் பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  கம்பஹா, வேயங்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறைக்கைதி தூக்கிட்டு தற்கொலை!

Posted by - December 23, 2018
குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட 22 வயதான சந்தேகநபரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் குறித்த…
மேலும்

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு!

Posted by - December 23, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை வயல் பிரதேசத்தில் மோட்டார் குண்டு ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறித்த வயல் பிரதேசத்தில் நேற்று மாலை பழுதடைந்த…
மேலும்

மன்னார் மனித எலும்புக்கூடு : பரிசோதனைக்காக வெளிநாடு கொண்டுசெல்ல நடவடிக்கை!

Posted by - December 23, 2018
மன்னர் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளிலிருந்து அதன்  மாதிரிகள் பரிசோதனைக்கு கொழும்பிற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், கடந்த   புதன்…
மேலும்

52 நாள் ஆட்சிக் குழப்பத்தின் பின்விளைவுகள் – நிலாந்தன்

Posted by - December 23, 2018
‘மதம் தத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்ல சமகால அரசியல் மற்றும் தார்மீக வாழ்விலும் நாங்கள் புதிய அறம் சார் நோக்கு நிலைகளை மீளச் சிந்திக்கவும் மீட்டுப் பார்க்கவும் மீள உருவாக்கவும் வேண்டிய தேவை இருக்கிறது.’   –   பேராசிரியர்.மைத்ரீ விக்ரமசிங்க(ரணில் விக்ரமசிங்கவின் துணைவி) 52…
மேலும்

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சி- ரணில்!

Posted by - December 23, 2018
அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ஜனாதிபதியுடன் சேர்த்து 32 அமைச்சர்கள் காணப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டின் அடிப்படையில் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியும் இதனை…
மேலும்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையர் தகவல்

Posted by - December 23, 2018
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கூறினார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான்…
மேலும்