கவிரதன்

யோசித்தவுக்கு எதிரான கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

Posted by - July 2, 2016
யோசித்த ராஜபக்சவின் நிதிக்குற்றச்சாட்டு விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை பேச்சாளர் அலவி அக்ரம் இதனை தெரிவித்துள்ளார். யோசித்த ராஜபக்ச தற்போது நிதிக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவகிறார். லேப்டினன்ட்…
மேலும்

பிரதியமைச்சர் அதிபரை தாக்கினார் – ஆசிரியர் தொழிற்சங்கம் முறைப்பாடு

Posted by - July 1, 2016
தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, மத்துகம் ஆரம்ப பாடசாலை அதிபரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. 9 மாணவர்களை முதலாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரி பிரதியமைச்சர் கடந்த…
மேலும்

மன்னாரில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் காயங்களுடன் மீட்பு.

Posted by - July 1, 2016
மன்னார் உயிலங்குளம் சென்பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை இரவு காயங்களுடன் நொச்சிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். முதுகுப்பகுதியில் பலத்த எறிகாயங்களுடன் குறித்த குடும்பஸ்தார் மீட்கப்பட்டுள்ளார். மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த…
மேலும்

கதிர்காம யாத்திரை குழுவினர் மீது காட்டுயானைகள் தாக்குதல் – ஜவர் காயம்.

Posted by - July 1, 2016
கதிர்காமத்திற்கு பாதையாத்திரையாக சென்ற அடியார் குழுவினர் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் காட்டு யானைகள் தாக்கியுள்ளது. சம்பவத்தில் ஜவர் காயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குமண ஊடாக கதிர்காமம் செல்லும் வழியில் வண்ணாத்தி கிணற்றடி எனும் இடத்தில் பக்தர்கள்…
மேலும்

வழக்கை ஒத்தி வைக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted by - July 1, 2016
லோதா குழுமத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தொடுத்திருந்த வழக்கினை இந்திய உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து, முன்னாள் நீதியரசர் லோதா தலைமையிலான நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் பரிந்துரைகள்…
மேலும்

துருக்கி விமான நிலைய தாக்குதல் தொடர்பில் பலர் கைது

Posted by - July 1, 2016
துருக்கி – அதாடர்க் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்த தாக்குதலை நடத்திய மூன்று பேரும், முன்னாள் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட…
மேலும்

மஹிந்த எதிர்பார்க்கும் அபிவிருத்தி என்ன? – சஜித் விளக்குகிறார்.

Posted by - July 1, 2016
நாட்டின் வீடற்ற சகல பிரஜைகளுக்கும், 2025ஆம் ஆண்டுக்குள் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று, வீடமைப்பு துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கண்டி அஞ்சலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் எந்தவித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படுவதில்லை…
மேலும்

ஊடகங்கள் நம்பகத்தன்மையானதும் நடுநிலையானதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் – ஊடகத்துறை அமைச்சர்

Posted by - July 1, 2016
நம்பகத்தன்மையானதும் மற்றும் நடுநிலையான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே சகல ஊடகங்களினதும் பொறுப்பு என்று, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். மக்களை முன்நோக்கி அழைத்து செல்லும் ஊடகவியலாளர்களே…
மேலும்

இலங்கை அரசாங்கம தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுகிறது – சுரேஷ்

Posted by - July 1, 2016
தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளாது, காலம் தாழ்த்தும் நுட்பத்தை அரசாங்கம் பின்பற்றுவதாக, ஜெனீவாவில் இடம்பெறும் 32வது மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனினும் இதனை இலங்கையின்…
மேலும்

வெளியேற முற்பட்ட வெளிநாட்டு கப்பல் தடுக்கப்பட்டுள்ளது.

Posted by - July 1, 2016
கொழும்பில் இருந்து அனுமதியின்றி வெளியேற முயற்சித்த வெளிநாட்டு கப்பல் ஒன்றை கடற்படையினர் காலி கடற்பரப்பில் வைத்து தடுத்துள்ளனர். கடற்படை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கம் விடுத்த கோரிக்கை அடிப்படையில் இந்த கப்பல் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்ததாக கூறப்படும்…
மேலும்