இன்றுடன் கவர்னர் ரோசையாவின் பதவி காலம் முடிவடைவதால், தமிழகத்தின் புதிய கவர்னர் தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று இரவுக்குள் வெளியிடுவார் என்று தெரிகிறது.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து நடத்திய ஆவேச தாக்குதலில் வெளிநாடுகளில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டம் வகுத்து தந்துவந்த ஐ.எஸ். தீவிரவாதி இயக்கத்தின் முக்கிய தளபதி அப் முஹம்மத் அல் அட்னானி கொல்லப்பட்டார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக போலியான புகைப்படத்தை சமர்ப்பித்த இந்திய தம்பதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள அரசு பத்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தினேஷ்-தாரகேஸ்வரி ரதோட் தம்பதியர் கடந்த மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக புகைப்படம் எடுத்து நேபாள…
திருக்கோவிலூர் அருகே குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை செய்த 3 பேரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் லட்சுமி உத்தரவிட்டார்.குடிநீரால் பரவும் நோய்களை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,099 பஞ்சாயத்துகளிலும் கடந்த 29-ந் தேதி முதல் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு…
தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று(31) காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
காஞ்சி மடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் திடீர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு ( 81) விஜயவாடாவில் உள்ள மடத்தில் திடீரென உடல் நலம் குன்றி மயக்கம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த…