Breaking News

சேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்டிக எடுக்கவும் -சிறிசேன

விவசாயத்துறைக்கு அச்சுறுத்தலாகவுள்ள சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு யுத்தத்திற்கு முகங்கொடுப்பதைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக ஒரு காலவரையறையை நிர்ணயித்து தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்க மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் பூச்சிக்கொல்லி முறைமையொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சேனா படைப்புழு பரவி வருவதன் காரணமாக விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய …

Read More »

யேர்மனியில் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2019

யேர்மனியில் 70 நகரங்களில் 19,20, தை, 2019 ஆகிய இரு நாட்களும் தமிழர் திருநாள் மிக விமர்சயாகக் கொண்டாடப்பட்டது. யேர்மனியின் முக்கிய இடங்களில் உள்ள எழுபது தமிழாலயங்கள் இம்முறை தைப் பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் அந்த நகரத்தில் உள்ள பொதுமக்கள் இப் பொங்கல் விழாவினில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். சில இடங்களில் வங்கக்கடலிலே காவியமான தளபதி. கிட்டண்ணா உட்பட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்குத் …

Read More »

பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தும் கரம்,மற்றும் சதுரங்கப்போட்டிகள்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர், மற்றும் ஏனைய போட்டிகளில் 2019 ம் ஆண்டுக்கான ஆரம்பப் போட்டி நிகழ்வாக 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்று கரம், சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றன. பரிசின் புறநகர்பகுதியில் ஒன்றான நந்தியார் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுனர் …

Read More »

எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக கே.பீ. ஹர்ஷ விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக நியமிக்கப்பட்டள்ள கே.பீ. ஹர்ஷ விஜயவர்தன, இலங்கை  நிர்வாக சேவையில் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்துள்ளார். கடந்த 1998 முதல் 2001 ஆண்டு வரை அமைச்சகத்தின் உதவிசெயலாளராக பணிபுரிந்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ  பிரதமராக இருந்த 2001 முதல் 2005 வரையான காலத்தில் கே.பீ. ஹர்ஷ விஜயவர்தன உதவி செயலாளராக பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

வெடிபொருளின் பின்னணியிலுள்ள அரசியல்வாதியை அம்பலப்படுத்துவேன் – நிஷாந்த

புத்தளம், வனாத்தவில்லு  பிரதேசத்தில்  கிடைக்கப்பெற்ற  வெடிபொருள் விவகாரத்தினை கொழும்பு மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்  மூடி மறைக்க  முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றார். அவர் யார் என்பதை வெகு  விரைவில்  அம்பலப்படுத்துவேன் என   பாராளுமன்ற   உறுப்பினர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார். பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை   காரியாலயத்தில்  இன்று செவ்வாய்கிழமை  இடம் பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்   கலந்துகொண்டு  கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், …

Read More »

விபத்தில் பெண் ஒருவர் பலி

மீரிகம – திவுலுபிட்டிய வீதியின் 20 ஆவது கட்டைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.  விபத்தில் பலத்த காயமடைந்த இருவரை மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மீரிகம பகுதியை சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் …

Read More »

புகையிரதத்துடன் லொறி மோதியதில் நான்கு இராணுவத்தினர் படுகாயம்

குருணாகல், வெல்லாவ புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று (22) அதிகாலை திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் ஒன்றில் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இராணுவ மேஜர் ஒருவர் உட்பட இராணுவத்தினர் நால்வரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.  விபத்தில் காயமடைந்தவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விபத்தில் …

Read More »

கோப் குழுவின் தலைவராக சுனில் ஹதுன்நெத்தி நியமனம்

கோப் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

எதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை – மஹிந்த

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமானது எனக்கு நிரந்தமில்லை. ஆகையினால் அதை நான் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் மூன்றாம் மாடியில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More »

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

இராஜகிரிய விஷேட அதிரடிப்படை படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 1695 போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்று  கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபர் 34 வயதுடைய, ரத்நாயக்க மாவத்தை, பெலவத்தை பத்தரமுல்லையை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  இவர் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  எனினும் போதைப் பொருள் …

Read More »