நிலையவள்

சப்ரகமுவ மாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை

Posted by - May 26, 2017
சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாகாணத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்கள செயலாளர் தெரிவித்துள்ளார்
மேலும்

முஸ்லிம் அரச பாடசாலைகளுக்கு இன்று முதல் ரமழான் விடுமுறை

Posted by - May 26, 2017
நாட்டின் முஸ்லிம் அரசாங்க பாடசாலைகள் புனித ரமழான் விடுமுறைக்காக இன்று மூடப்படுவது தொடர்பில் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. முஸ்லிம் பாடசாலைகள் இன்று முதல் ஜூன் மாதம் 26ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும். இதேவேளை அட்டாளைச்சேனை கல்வியல்…
மேலும்

சப்புகஸ்கந்த பகுதியில் வீடொன்றில் மீது மண் சரிவு – மூவர் பலி

Posted by - May 26, 2017
சப்புகஸ்கந்த, ஹெய்யந்துடுவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மண் சரிவு வீட்டின் மீது வீழ்ந்துள்ளதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடியாக இரத்தினபுரி மாவட்டத்தில் 196.7 மில்லி மீற்றர் மழை…
மேலும்

ஹெய்யந்துடுவ பகுதி வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் 2 பெண்கள் பலி

Posted by - May 26, 2017
சப்புகஸ்கந்த – ஹெய்யந்துடுவ  பகுதியில் வீடொன்றில் மண்சரிவு இடம்பெற்றுள்ளது. மேலும் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. இதில் 2 பெண்கள் பலியாகினர். இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபடியாக  இரத்தினபுரி  மாவட்டத்தில் 196.7 மில்லி மீற்றர்  மழை  பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேல், தென், மத்திய…
மேலும்

மன்னார் பொது மாயனத்திற்கு கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்கள் எரியூட்டப்படுகின்றமையினால் மக்கள் பாதிப்பு(காணொளி)

Posted by - May 25, 2017
மன்னார் நகர சபையினால் மன்னார் பகுதியில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள, மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகின்றமையினால் அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக பாதீக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மன்னார் பொது…
மேலும்

தேசிய இளைஞர் தின நிகழ்வு (காணொளி)

Posted by - May 25, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும்  தூய்மையான இலங்கைக்கான இளைஞர்களின் குரல் எனும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய இளைஞர் தின நிகழ்வு கொண்டாடப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேசிய இளைஞர் தின…
மேலும்

மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு (காணொளி)

Posted by - May 25, 2017
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியால மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், வீதி நாடகமும் வித்தியாலய சுகாதார கழக பொறுப்பாசிரியர்களான திருமதி எம்.சங்கர், திருமதி கே.யுவராஜா ஒழுங்கமைப்பில் வித்தியாலய அதிபர் வி.முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. குறித்த டெங்கு ஒழிப்பு…
மேலும்

வவுனியாவில் சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 22 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - May 25, 2017
  கடும் மழை, காற்றை பொருட்படுத்தாமல் சுகாதார தொண்டர்கள் தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி இன்று 22வது நாளாக தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய சுகாதார தொண்டர்களே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை…
மேலும்

நுவரெலியா ஹட்டன் புஸல்லாவ இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை(காணொளி)

Posted by - May 25, 2017
நுவரெலியா ஹட்டன் புஸ்ஸல்லாவ இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்கள், புஸ்ஸல்லாவ நகரத்தின் ஒரு பகுதியில், நேற்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த பகுதியில் தேங்கியிருந்த பொலித்தின் பைகளும் மாணவர்களால் அகற்றப்பட்டன. ஹட்டன் புஸ்ஸல்லாவ இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர்…
மேலும்

எங்கள் மண்ணில் மீண்டும் சென்று நின்மதியாக வாழ வழியை ஏற்படுத்தித்தாருங்கள்- இரணைதீவு மக்கள்(காணொளி)

Posted by - May 25, 2017
இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 25வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளத்தைக்கொண்டதும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாகவும் காணப்படும் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள…
மேலும்