நிலையவள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - May 3, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சவுதியில் இருந்து பிரவேசித்த விமானம் ஒன்றிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டப் பெண், இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும்

தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் – தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி

Posted by - May 2, 2017
தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் “கலைமாருதம்” எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10 வது ஆண்டாக கலைமாருதம் மாபெரும் ஈழத்து நட்சத்திர விழாவாக அரங்கம் நிறைந்த மக்களுடன்…
மேலும்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 72 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   செவ்வாய்க்கிழமை    எழுபத்தி  இரண்டாவது  நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்…
மேலும்

மன்னார் மறைமாவட்ட ஆயர் வடக்கு முதலமைச்சர் விசேட சந்திப்பு

Posted by - May 2, 2017
இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மன்னார் ஆயர் இல்லத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் போது வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின்போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை…
மேலும்

யாழில்முன்னேற்றப் பாதையில் யாழ்க்கோ.நிறுவனம்

Posted by - May 2, 2017
யாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள் வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது.பாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு யாழ்கோ நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. ஒவ்வொன்றும் ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான ஒன்பது பால் பரிசோதனை மானிகளை…
மேலும்

 விடுதிக்கல் கிராமத்தில் குப்பை போடுவதற்கு எதிர்ப்பு

Posted by - May 2, 2017
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டுப் பகுதியில் குப்பை போடுவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கிராமவாசிகள், உழவு இயந்திரங்களில் கொண்டுவரப்பட்ட குப்பையை அவ்விடத்தில் போடுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், குப்பையுடன் வந்த 2 உழவு…
மேலும்

 வங்கியில் வைப்பிலிட கொண்டுசென்ற பணம் கொள்ளை

Posted by - May 2, 2017
ஹொரனை, அரமணகொல்ல பகுதியில் உள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 31 இலட்சம் ரூபாய் பணம், கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

தெவிநுவர வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்

Posted by - May 2, 2017
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெவிநுவர வெளிச்ச வீடு, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணங்கவினால், எதிர்வரும் வியாழக்கிழமை (04) மாலை 3 மணிக்கு, மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம,  இலங்கைத்…
மேலும்

 சைட்டத்துக்கு எதிராக இ.போ.சவும் போராட்டம்

Posted by - May 2, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக எதிர்வரும் 5ஆம் திகதி வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்க இ.போ.ச தொழிற்சங்கள் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மே தினத்துக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவர் விபத்தில் மரணம்

Posted by - May 2, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணிக்கு வந்திருந்த ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பேரணியில் கலந்துகொண்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும் வேளையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீகிரிய பகுதியை சேர்ந்த 44 வயது குறித்த நபர் பஸ்…
மேலும்