நிலையவள்

யாழில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்

Posted by - July 27, 2017
யாழ்ப்பாணம் – துன்னாலை பிரதேசத்தில் காவல்துறை அதிகாரியொருவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். நேற்று இரவு இளைஞர்கள் சிலர், கொடிகாமம் காவல்நிலையத்தில் சேவைபுரியும் அதிகாரியொருவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக கொடிகாமம் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
மேலும்

யாழ் சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பியோட்டம்

Posted by - July 27, 2017
யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவென அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளார். குறித்த கைதி யாழ் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவரப்பட்டு திருட்டு சம்பவம் தொடர்பான வழக்கொன்றில் யாழ் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே…
மேலும்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - July 27, 2017
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு, ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரா சுவிஸ் குமாரை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுவது தொடர்பிலேயே வாக்குமூலம்…
மேலும்

புதையல் தோண்ட முற்பட்ட 5 பேர் கைது

Posted by - July 27, 2017
புலத்கொஹூபிடிய – கலுபஹன வத்த பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட 5 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிற்கு அமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று, ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம்

Posted by - July 27, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறிதத் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது, குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு…
மேலும்

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை

Posted by - July 27, 2017
கேகாலை – இம்புல்கஸ்தெனிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மற்றும் ஓர் நபருடன் ஏற்படுள்ள கருத்து முரண்பாடு ஒன்றின் போது குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதன்போது 38 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,…
மேலும்

மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்

Posted by - July 26, 2017
 யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக்…
மேலும்

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

Posted by - July 26, 2017
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர் நாளை காலை 10.30 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
மேலும்

தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - July 26, 2017
தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 396 பேரும், 2015ஆம் ஆண்டு 452 பேரும், 2016ஆம் ஆண்டு 852 பேரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின்…
மேலும்

பாடசாலைகளில் வெள்ளிக்கிழமை கல்வி நடவடிக்கை இடம்பெறாது

Posted by - July 26, 2017
இந்நாட்களில் அதிக வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் வெள்ளி(28), சனி(29) மற்றும் ஞாயிறு(30) ஆகிய மூன்று நாட்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்,…
மேலும்