Breaking News

நாலக சில்வா மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 21 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட குரல் பதிவையடுத்து அவர் கைது …

Read More »

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்

2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வௌியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை கல்வியமைச்சினால் வௌியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா கூறியுள்ளார்.  மீள்பரிசீலனை பெறுபேறு மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான …

Read More »

நிதியமைச்சின் செயலாளர் பதவியை ஏற்க தயார்-தம்மிக பெரேரா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் முன்னணி வர்த்தகர்களிடம் நாட்டுக்கு சேவையை பெற்றுக் கொண்டதாகவும், தற்போதைய தலைவர்களும் நாட்டின் எதிர்கால பயணத்திற்காக முன்னணி வர்த்தகர்களிடம் ஒத்துழைப்பு பெற வேண்டும் என்று பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா கூறியுள்ளார்.  தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு கூறியதுடன், தேவையென்றால் நிதியமைச்சின் செயலாளர் பதவியையும் ஏற்றுக் கொள்ள தான் தயார் என்றும் கூறியுள்ளார்.  இதேவேளை இலங்கையின் வடக்கு மாகாணம் தொடர்பில் …

Read More »

போதை மாத்திரைகளுடன் போலி வைத்தியர் கைது

வீரகுல பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய வீரசூரியகந்த, பசியாலை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி வைத்திய நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருந்த பல்வேறு வகையான மருந்து பொருட்களுடன் போதை மாத்திரைகளும், ஆயுர்வேத வைத்தியர் என்று கூறப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மீரிகம, பமுனுவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று …

Read More »

கிதுல்கம பகுதியில் நீராடிக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி

கிதுல்கம பகுதியில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  நேற்று (15) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  லெல்கொட, உடுபில பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.  இதேவேளை திருகோணமலை, சங்கமித்த கடற்கரையில் சுழிக்கு சிக்குண்ட நால்வரை திருகோணமலை பொலிஸார் காப்பற்றியுள்ளனர்.  இவ்வாறு காப்பற்றப்பட்டவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி அறிக்கை

எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சபதம் ஏற்று வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் எங்கள் தங்கத்தின் பிறந்த நாள். சிவப்புச் சிங்கத்தின் பிறந்த நாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் …

Read More »

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது – ஏற்பாடுகள் தீவிரம்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளது. இதற்காக 850 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.  ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்குவதற்கு அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதில் மாட்டின் உரிமையாளர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை முறையாக ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருச்சி உள்ளிட்ட பல …

Read More »

பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பான பிரிட்டன் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி

பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது.  பிரக்ஸிட்டை அமல்படுத்துவது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றி முடிவு செய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பிரிட்டன் ஐரோப்பிய யூனியிலிருந்து பிரிய ஆதரவு தெரிவித்தனர். பிரிட்டனின் இந்த …

Read More »

சட்டவிரோத பண பரிமாற்றம் – ராபர்ட் வதேரா உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ராபர்ட் வதேரா உதவியாளரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த பிரபல ஆயுத தரகர் பண்டாரி. இவருக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மூலம் லண்டனில் அவர் 1.9 மில்லியன் பவுண்டு மதிப்பில் எஸ்டேட் வாங்கியதும், பின்னர் அந்த எஸ்டேட்டை அதே விலைக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பண்டாரியின் உறவினர் சுமித் …

Read More »

டெல்லியை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது- கமல்

டெல்லியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். தற்போது மக்கள் முன்வைக்கும் …

Read More »