நிலையவள்

கோட்டா மீது உள்ள பயமே அமெரிக்காவில் வழக்கு- மஹிந்த

Posted by - April 17, 2019
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எவ்வித சதி முயற்சியும் இல்லை என்றும், தேவையான எல்லா சந்தர்ப்பங்களிலும் அதற்கு தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில்…
மேலும்

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

Posted by - April 17, 2019
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சம்பவத்தி 05 பேர் கிளிநொச்சி, பாரதிபுரம் மயானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய கிளிநொச்சி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள்…
மேலும்

பாலைத்தீவில் கடலாமைகளுடன் மூவர் கைது

Posted by - April 17, 2019
பாலைத் தீவின் வடக்குபகுதியில் இரு கடலாமைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படையினர் செவ்வாய்க்கிழமை பாலைத்தீவின் வடக்கு கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமான படகொன்றை அவதானித்துள்ளனர். இதன்போது விரைந்து செயற்பட்ட கடற்படையினர், குறித்த படகை…
மேலும்

புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியது-புகையிரத திணைக்களம்

Posted by - April 17, 2019
புகையிரத சேவை இன்று வழமை போன்று இடம்பெறுவதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.  நேற்று புகையிரதம் தடம்புரண்டதால் புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.எஸ். பொல்வத்தகே கூறினார்.  கொழும்பில் இருந்து அவிஸ்ஸவெல்ல நோக்கி பயணித்த…
மேலும்

இலங்கைக்கு நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்

Posted by - April 17, 2019
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கமைய 800 மில்லியன் ரூபாய்களை கடனாக வழங்க அந்த வங்கி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 4 வருடங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்ற திட்டத்திற்கே, ஆசிய…
மேலும்

விசேட வைத்திய நிபுணர்களுக்கு புதிய சட்டம்

Posted by - April 17, 2019
அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களை பரிசோதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள், நோயாளர்களுடன் குறைந்தபட்சம் 10 நிமிடத்தையேனும் கழிக்க வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும்…
மேலும்

கொள்ளுபிட்டியில் போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - April 17, 2019
கொள்ளுபிட்டியில் ஐஸ்ரக போதைப்பொருளுடன் சட்டத்தரணி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

தமிழர்களுக்கு நீதி கோரி நீண்ட நடைபயணம் – சிவாஜி

Posted by - April 17, 2019
பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்காத இலங்கை அரசாங்கத் தரப்பினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்வரும், 26ஆம் திகதி பாரிய நடைபயணமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்…
மேலும்

குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு

Posted by - April 17, 2019
தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.  தற்போது இதற்காக மாவட்ட செயலாளர்களுக்குத் தேவையான நிதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.  குடி…
மேலும்

சட்டவிரோத மதுப் பாவனை தொடர்பில் 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - April 17, 2019
புத்தாண்டு காலத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுப் பாவனை தொடர்பில் சுமார் 100 பேர் வரையானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் கூறியுள்ளது.  கடந்த 13 மற்றும் 14ம் திகதிகளில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக…
மேலும்