Breaking News

உறவு வலயத்துக்குள் தமிழும் வேண்டும்: சீன தூதுவர்

இலங்கை மக்களுடனான தமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் செங் யுவான், தமிழ் மொழி பேசும் மக்களையும் தமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புவதாகவும் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள சீன தொழில் முயற்சி திட்ட வளாகங்களில், இலங்கையின் மொழிக்கொள்கை பின்பற்றப்படுவதில்லை. விசேடமாக, தமிழ் மொழி புறக்கணிப்புக்கு உள்ளாகிறது என்ற புகார், சமீப காலங்களில் மேலெழுந்துள்ளது. இவை பற்றி சீன தூதுவரை சந்தித்து நேரடியாக …

Read More »

பிலிப்பைன்ஸ்ஸில் மைத்திரி ஐந்து வருட செயற்றிட்டத்தில் கைச்சாத்து!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸுக்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக, பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இலங்கைக்குமிடையே, ஐந்து வருட செயற்றிட்டமொன்று,  இன்று (18) முற்பகல் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையை, அரிசியில் தன்னிறைவு அடையச் செய்வதற்கான தேசியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தச் செயற்றிட்டம் கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கையை அரிசியில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றும் இலக்கை அடைந்துகொள்வதும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களை குறைப்பதும் இதன் நோக்கமாகும். பிலிப்பைன்ஸ் …

Read More »

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு 07ம் திகதி விசாரணைக்கு

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 07ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  அன்றைய தினம் வழக்கு சம்பந்தமாக வாய்மொழி விரிவுரையை சமர்பிப்பதாக உடுவே தம்மாலோக சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

Read More »

சவூதியில் நிர்க்கதியாகியுள்ள பெண்களை மீட்க விரைவில் நடவடிக்கை!

சவூதியில் நிர்க்கதி நிலையில் பெண்கள் நலன்புரி நிலையத்தில் தங்கி இருக்கும் இலங்கைப் பணிப் பெண்களின் பிரச்சினை தொடர்பில் ஒருவாரத்துக்குள் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெட்டர் அப்புஹாமி தெரிவித்தார். அத்துடன் ஆள் கடத்தல்களில் ஈடுபடும் முகவர் நிறுவனங்களை நிரந்தரமாக தடைசெய்யும் உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சவூதியில் இலங்கைப் பெண்கள் சிலர் நலன்புரி நிலையத்தில் நிர்க்கதியான நிலையில் இருப்பது தொடர்பில்  …

Read More »

சீனமொழியில் பிரதமரின் சுயசரிதை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை நூல் சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. சம்பத் பண்டார என்பவரால் எழுதப்பட்ட அந்த சுயசரிதையை சீனப் பேராசிரியர்கள் வான் யூவும் ஜின் ஷின்யின்னும் சேர்ந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள்.சரசவிய பிரசுராலயம் பெயாஜிங்கில் உள்ள யான்சின் பப்ளிசேர்ஸுடன் இணைந்து நூலை பிரசுசித்திருக்கிறது. நூலின் பிரதி இன்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.  இலங்கையின் அரசியல் தலைவர் ஒருவரின் சுயசரிதை சீனமொழியில் வெளிவந்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.

Read More »

வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா

இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக நிரந்தர வதிவிட விசாவை வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்களில் ஒருவரான சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.  இத்தகைய இலங்கையர்களின் அறிவையும் ஆற்றல்களையும் நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்வது திட்டத்தின் நோக்கம். இத்தகைய நிரந்தர வதிவிட வீசாவை பெற்றுக்கொள்வதன் மூலம் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பல உரிமைகளை துய்க்க முடியும்.  இலங்கையில் முதலீடு செய்தல், காணிகளை கூலிக்கு பெற்றுக்கொள்ளுதல் …

Read More »

மகனுக்கு ஹெரோயின் வழங்கிய தந்தை கைது

பிபில மெதகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவருக்கு 25 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரவு உணவை வழங்க வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் அந்த உணவை பரிசோதித்த போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து 67 வயதுடைய தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக செய்தியாளர் கூறியுள்ளார்.  சம்பவம் தொடர்பில் மெதகம …

Read More »

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸவுக்கு பிணை

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் கே.ஜி குலதிஸ்ஸவை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி தெமடகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நுழைந்த சந்தர்ப்பத்தில் பதற்ற நிலமையை உருவாக்கியதற்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.  சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் …

Read More »

நாட்டின் அதிகரிப்பு

இலங்கையில் மீன் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக கடற்றொழில் நீரியியல் வள ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டில் மொத்தமாக 33 ஆயிரம் மெற்றிக் தொன் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் பெறுமதி 390 கோடி ரூபாவாகும். கடந்தாண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த கடலுணவின் பெறுமதி நான்காயிரத்து 200 கோடி ரூபாவை தாண்டுவதாக அமைச்சர் கூறினார். மீன் இறக்குமதியை குறைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read More »

தயாரிக்கப்படாத அரசியலமைப்புக்காக ஒரு சிலர் அரசாங்கத்தை தாக்குகின்றனர் – அகில

புதிய அரசிலயமைப்புக்கான வரைபு இதுவரை முன்வைக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். குளியாப்பிட்டி மேற்கு பிரதேசத்துக்கான நில செவன அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (18.01.2019) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இதுவரை தயாரிக்கப்படாத அரசியலமைப்பு தொடர்பாக இல்லாத ஒன்றைக் கூறியும் …

Read More »