Breaking News

வீதியோரத்தில் வீசப்பட்ட பெண் சிசு

வீதி ஓரத்தில் அநாதரவாக வீசப்பட்டுக் கிடந்த இரண்டரை மாதம் நிரம்பிய பெண் சிசுவொன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தமக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து கிரான் முருகன் கோயில் வீதிக்குச் சென்றபோது அங்கு வீசப்பட்டுக் கிடந்த கைக் குழந்தையைத் தாம் மீட்டெடுத்து உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் இக் குழந்தை வீசப்பட்டிருக்கலாம் என விசாரணைகளின்போது பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை …

Read More »

யானைத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் பலி

Share திருகோணமலை, சேநுவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 58 வயதுடைய கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

Read More »

ஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு, விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.  இச் சம்பவமானது நேற்று மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொழும்பு – 13 ஐச் சேர்ந்த 32 வயதான எண்டன் மைக்கல் நிஷாந்தன் குறூஸ் என்பவரே காயடைந்துள்ளார். குறித்த நபர் முச்சக்க வண்டியொன்றில் பயணிக்கும்போது அவரைப் பின் தொடர்ந்து வந்துள்ள அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இந்த துப்பாக்கி சூட்டை …

Read More »

கட்டிடக்கலையின் உலகத் தலைநகர் ரியோ டி ஜெனீரோ – யுனெஸ்கோ அறிவிப்பு

கட்டிடக்கலையின் உலகத் தலைநகராக ரியோ டி ஜெனீரோவை யுனெஸ்கோ அறிவித்தது. ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (யுனெஸ்கோ), கட்டிடக்கலைஞர்களின் சர்வதேச ஒன்றியம் ஆகிய 2 அமைப்புகளும் இணைந்து நகர்ப்புற சூழலில் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும் நகரம் குறித்த ஆய்வை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.  இதில் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு, கட்டிடக் கலைத்துறையில் சிறந்து விளங்கும் நகரமாக பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகர் …

Read More »

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல் விலையின் தாக்கம் வாகன ஓட்டிகளிடையே பெரிதாக தெரிவது இல்லை.  இந்த நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. எண்ணைய் நிறுவனங்கள் …

Read More »

ரபேல் போர் விமான பேரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

ரபேல் போர் விமான பேரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரு தகவலையும் வெளியே விடாமல் அனைத்து விவரங்களையும் பரம ரகசியமாக வைத்துக்கொண்டு கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் நேரடியாகப் பதிலே சொல்லாமல் “ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லை” என்று பிரதமர் நரேந்திரமோடி செயற்கையாக அணிந்திருந்த “போலி …

Read More »

சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2½ லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னையில் 23, 24-ந் தேதிகளில் நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2½ லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நெல்லை டவுனில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- எம்.ஜி.ஆர். மக்களுக்காக வாழ்ந்த தலைவர். ஜெயலலிதா 6 முறை முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். அவரது ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் ஏராளம். தி.மு.க. ஆட்சியில் என்ன …

Read More »

ஊதியம் இன்றி வேலை பார்ப்பவர்களுக்கு பீட்சா – முன்னாள் ஜனாதிபதி புஷ் வழங்கினார்

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால், தனக்காக ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி புஷ் ‘பீட்சா’ வழங்கினார். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கி உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் பலர் ஊதியம் இன்றி வேலை பார்த்து வருகிறார்கள். இந்த …

Read More »

அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் பலி

உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய் இதயம் வெடித்து உயிரிழந்தது.  உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய். அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த ‘பூ’ வின் பெயரில் ‘பேஸ்புக்’ ‘இன்ஸ்ட்ராகிராம்’ போன்றவற்றில் தொடங்கப்பட்ட பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். …

Read More »

மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரம் – டிரம்ப் புதிய சமரச முயற்சி

மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரத்தில் டிரம்ப் புதிய சமரச முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஜனநாயக கட்சியினர் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்காக உள்நாட்டு நிதியில் 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்கும்படி ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார். இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற செனட் சபையில் செலவின மசோதா நிறைவேறாமல் போனது. இதன் …

Read More »