கோவையில் மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு செப்டம்பர் 10 – 2017, ஞாயிறு மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

32100 0

இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கு.ராமகிருஷ்ணன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன், அடக்குமுறை எதிர்ப்பு கூட்டியக்கத்தின் தோழர் பார்த்திபன் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் அருள்முருகன், பிரவீன் குமார் ஆகியோர் உரையாற்றினர். ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இடதுசாரி எழுத்தாளர் கெளரி லங்கேஷ் மற்றும் நீட் தேர்வால் கொல்லப்பட்ட மாணவி அனிதா ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்வரும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது :

– நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்
– கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்று.
– கல்வியை காசாக்கும் WTO ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசே வெளியேறு.

Leave a comment