தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தும் ஈருருளிப் பயணம் – நாள் 4

4454 0

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் அரசியல் சந்திப்பின் ஊடாக தமிழ் மக்களின் தேவையினையும் ,இழைக்கப்பட்ட இனவழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினையும் ஆணித்தரமாக வலியுறித்தி பயணித்த போது டென்மார்க் மனிதநேயச் செயற்பாட்டாளர் திரு மகேஸ்வரன் அவர்கள் பயண இடையில் படுகாயம் அடைந்து அவர் மீள நாடு திரும்பிய போதும் ஏனையவர்கள் உறுதியுடன் மனிதநேய ஈருருளிப் பயணத்தை லக்சம்புர்க் நாட்டை ஊடறுத்து யேர்மன் நாட்டின் சார்புருக்கன் நகரத்தை நோக்கி பயணிக்கின்றது.

இன்றைய பயணத்தில் வேற்றின ஈருருளிப் பயண வீரர்களோடு ஏற்பட்ட சந்திப்பில் எமது மனிதநேய ஈருருளிப் பயணத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தியதோடு துண்டுப்பிரசுரங்களையும் வழங்கி எமது அறவழிப் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் வரவேற்பை பெற்று நான்காம் நாளாக யேர்மன் நாட்டை அண்மித்து இருக்கின்றது. ஈருருளிப்பயணம் எதிர்வரும் நாட்களில் யேர்மனி,பிரான்ஸ் இறுதியாக சுவிஸ், ஜெனிவா மாநகரை சென்றடைய உள்ளது.

Leave a comment