ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் ஆங்சான் சூகி கருத்து

34309 0

ரகின் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களையும் தமது அரசாங்கம் பாதுகாத்து வருவதாக மியன்மாரின் ஆளுங் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஸிற்கு தப்பிச் சென்றிருப்பதாக கூறப்படுகின்றது.

அத்துடன் பலர் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.

ஆனால் நோபல் பரிசில் வென்ற ஆங் சான் சூகி இது தொடர்பில் இன்னும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்று, பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பின்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான தகவல்கள் வெளியாக்கப்படுவதாகவும், அவை தீவிரவாதிகளுக்கு சார்பாக இருப்பதாகவும் ஆங் சான் சூகி கூறியுள்ளார்.

துருக்கி ஜனாதிபதிக்கு தொலைபேசி ஊடாக அவர் இந்த தகவலை தெரிவித்தாக, அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

Leave a comment