ஐ.நா மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு சம்பந்தன் கடிதம் 

29505 0

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனினால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள, நீண்டகாலம் தீர்க்கப்படாதிருக்கின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண்பதற்கு, சர்வதேச சமுகத்தின் தலையீட்டை கோரி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கம் தமது இலக்கில் இருந்து திசைதிரும்ப ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச சமுகத்தின் உள்வருகை அவசியப்படுவதாக சம்பந்தன் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் மக்கள் பொறுமை இழந்துள்ளனர்.

இனியும் சர்வதேச சமுகம் அமைதிகாக்கக்கூடாது என்றும் சம்பந்தன் வேண்டுகோள்விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment