வடகொரியா மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனைக்கு இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினூடாக இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பிரகடனங்களை மீறும் வகையில் அண்மையில் இதுபோன்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இவை, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும், அதற்கு அப்பாலும் தாக்கம் செலுத்தும் என இலங்கை சுட்டிக்காட்யுள்ளது.
இந்த நிலையில், இதற்கு தீர்வு காண, சர்வதேச சமூகம் வார்த்தைகளையும் செயற்கலையும் ஒன்றிணைக்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

