ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கருத்தை முன்வைக்க அவகாசம் கோருகிறது

431 0

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பந்துல குணவர்தன மற்றும் தினேஸ் குணவர்தன ஆகிய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனுவொன்றை கையளித்துள்ளனர்.

குறித்த உடன்படிக்கையில் உள்ள பாதிப்பு தன்மை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு நேற்று (28) நாடாளுமன்றத்தில் தமக்கு வாய்ப்பளிக்கப்பட வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை அனுமதி பத்திரத்தில் ஹம்பாந்தோட்டை துறை உடன்படிக்கை தொடர்பில் அனுமதி பெற்ற விடயங்கள் மற்றும் தற்போது அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment