27 கைதிகளின் உயிரிழப்பு தொடர்பில் மீள விசாரிக்க திகதி அறிவிப்பு

390 0

வெலிகட சிறைச்சாலை மோதலில் 27 கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. 

சுதேஷ் நந்திமால் டி சில்வா என்ற கைதியினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் இதுவரை முறையான விசாரணை நடத்தி சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை என்று மனுதாரர் நீதிமன்றத்திடம் கூறியுள்ளார்.

அதன்படி அந்த மனுவை செப்டம்பர் மாதம் 12ம் திகதி விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்ததாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி வெலிகட சிறைச்சாலையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது கைதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் உயிரிழந்தனர்.

Leave a comment