அமெரிக்க யுத்த கப்பலின் நடமாட்டத்திற்கு சீனா கடும் ஆட்சேபனை

6448 0

தென் சீன கடல்பிராந்தியத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தீவிற்கு அருகாமையில், அமெரிக்க யுத்த கப்பலின் நடமாட்டத்திற்கு சீனா கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.

இந்த செயல் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட ‘சீண்டும்’ நடவடிக்கை என சீனா குறிப்பிட்டுள்ளது.

சீனாவினாலும் ஏனைய பிராந்திய நாடுகளினாலும் உரிமை கோரப்பட்டு வரும் ட்ரிரோன் தீவுக்கு அருகாமையில் அமெரிக்க யுத்த கப்பலான யூ.எஸ்.எஸ். ஸ்ரெத்தம் சென்றுள்ளது.

இதனையடுத்து சீனா அந்த பிராந்தியத்திற்கு கடற்படை கப்பல்களையும் குண்டு வீச்சு வானூர்திகளையும் அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலின் போது, சில தீய சக்திகள் சீன மற்றும் அமெரிக்க உறவிற்கு பங்கம் விளைவிப்பதாக சீன ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதிக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment