முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த சூழ்ச்சி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

230 0

முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த எதிர்த்தரப்பினரால் அரசியல் ரீதியான சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் 90 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்கு வாக்களித்தனர்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்காகவே சிறுபான்மை மக்கள் தமக்கு வாக்களித்திருந்தனர்.

அந்த பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்ற தாம் பாடுபடுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே, அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு செயற்படுமாறு அனைத்து முஸ்லிம்களிடமும் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment