இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே முதல் சரக்கு விமான சேவை

5320 0

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே முதல் சரக்கு விமான சேவை தொடங்கியது. காபூல் நகரில் இருந்து டெல்லி வந்த விமானத்தை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே முதல் சரக்கு விமான சேவை நேற்று தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி இந்த விமான சேவையை நேற்று காபூல் விமான நிலையத்தில் தொடங்கி வைத்தார். அப்போது, ஆப்கான் மந்திரிகள் சிலரும், அந்நாட்டிற்கான இந்திய தூதர் மன்ப்ரீட் வோஹ்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதில் மருத்துவ உபகரணங்கள், தண்ணீர் தூய்மை படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்ட விமானத்தில் அதிக அளவில் கொண்டு வரப்பட்டது.
காபூல் நகரில் இருந்து 100 டன் பொருட்களுடன் புறப்பட்ட இந்த விமானம் நேற்று நள்ளிரவு தலைநகர் புதுடெல்லி வந்தடைந்தது.
புதுடெல்லியில் விமானம் வந்தடைந்த போது, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அதனை வரவேற்றார். அப்போது சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி கனபதி ராஜூ, வெளியுறவுத் துறை இணை மந்திரி அக்பர், இந்தியாவிற்கான ஆப்கான் தூதர் ஷைதா அப்தலி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a comment