சுவிஸ் பொலிசார் துரத்திய கொள்ளையர்களின் கார்: சிக்கியபோது…

12 0

சுவிட்சர்லாந்தில், பூட்டப்பட்ட கடை ஒன்றிற்குள் நுழைந்து மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடிப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சுவிஸ் பொலிசார் துரத்திய கொள்ளையர்களின் கார்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Chemin de l’Adret என்னுமிடத்தில் அமைந்துள்ள கடை ஒன்றில் கொள்ளையர்கள் புகுந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்துள்ளார்கள்.

 

பொலிசாரைக் கண்ட கொள்ளையர்கள், தங்கள் காரில் தப்பியோடியுள்ளனர்.பொலிசார் துரத்த, கார் பார்க்கின் ஒன்றின் வழியாக தப்ப முயன்ற அந்தக் கார், வழிமறித்த பொலிஸ் கார் ஒன்றின் மீது மோதியுள்ளது.

பொலிசார் காரிலிருந்து கொள்ளையர்களை இறங்கச் சொல்ல, இரண்டு பெண்கள் கைகளைத் தூக்கியவண்ணம் காரிலிருந்து இறங்கியுள்ளார்கள்.

பட்டப்பகலில் பூட்டப்பட்ட கடைக்குள் நுழைந்து துணிச்சலாகக் கொள்ளையடிக்க முயன்ற அந்தப் பெண்களைக் கைது செய்த பொலிசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.