மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவுக்கு நேரெதிரான முடிவை எடுத்துள்ள ஜேர்மனி

15 0

ஈரான் தொடர்பில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா படைகளைக் குவித்துவரும் நிலையில், ஜேர்மனியோ, அமெரிக்காவுக்கு நேரெதிரான முடிவொன்றை எடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு நேரெதிரான முடிவை எடுத்துள்ள ஜேர்மனி

ஆம், ஜேர்மனி, மத்திய கிழக்கு பகுதியிலிருந்த தனது படைகளின் அளவைக் குறைத்துள்ளது. குர்திஸ்தான் பகுதியிலுள்ள ஈராக்கின் தலைநகரான எர்பில் நகரில் ஜேர்மன் ராணுவம் முகாமிட்டுள்ளது.

உள்ளூர் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக அங்கு ஜேர்மன் வீரர்கள் முகாமிட்டிருந்தார்கள்.

இந்நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரிப்பதால், எர்பில் நகரில் முகாமிட்டுள்ள ஜேர்மன் படைகள் சிலவற்றை தற்காலிகமாக அங்கிருந்து விலக்குவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில், ஏராளமான ஜேர்மன் படைவீரர்கள் எர்பில் நகரிலிருந்து வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

முகாமின் செயல்பாட்டுக்குத் தேவையான வீரர்கள் மட்டுமே எர்பில் முகாமில் இருப்பதாகவும் ஜேர்மன் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.