உங்கள் வேலையைப் பாருங்கள்… இத்தாலி பிரதமர் மீது மேக்ரான் கடும் விமர்சனம்

13 0

பிரான்ஸ் உள்விவகாரத்தில் தலையிட்டு கருத்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரான்சில் தீவிர வலதுசாரி ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதியான அவரை கடுமையான விமர்சித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 12ஆம் திகதி, பிரான்சிலுள்ள லீயோனில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த தீவிர வலதுசாரி பேரணி ஒன்றின்போது, குவென்டின் டெரான்க் (23) என்னும் இளைஞர் தாக்கப்பட்டார்.அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கடும் சர்ச்சை எழுந்தது. எட்டு ஆண்கள் மூன்று பெண்கள் என மொத்தம் 11 பேர் இந்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சில் மார்ச் மாதம் நகராட்சித் தேர்தல்களும், 2027ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் நடந்துள்ள இந்தக் கொலை, அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கு, தீவிர வலதுசாரிக் கட்சியான National Rally (RN) கட்சி போட்டியிட இருக்கும் நிலையில், வலதுசாரி ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்ட விடயம் அரசியலாகியுள்ளது.பிரான்சில் இப்படிப்பட்ட ஒரு சூழல் நிலவும் நேரத்தில் டெராங்குவின் கொலை, ’முழு ஐரோப்பாவுக்குமான ஒரு காயம்’ என மெலோனி விவரித்திருந்தார்.

இடதுசாரி தீவிரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களால் தாகுதலாலும், பல நாடுகளில் பரவி வரும் கருத்தியல் வெறுப்புச் சூழலாலும், 20 வயதேயான ஒரு சிறுவன் கொல்லப்பட்ட விடயம் தன்னை கடும் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் மெலோனி.

உங்கள் வேலையைப் பாருங்கள்... இத்தாலி பிரதமர் மீது மேக்ரான் கடும் விமர்சனம் | Macron Calls Out Meloni On France Activist Remark

இந்நிலையில், மெலோனியின் கருத்து குறித்துப் பேசிய மக்ரோன், இந்த சம்பவம் குறித்து மெலோனி பகிரங்கமாக கருத்து தெரிவித்ததற்காக அவரை விமர்சித்ததுடன், ’மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்துங்கள்’ என்றும், அவரவர் தங்கள் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்றும் கூறியுள்ளார்.