அக்குரேகொடை இரட்டை படுகொலை: AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சந்தேகநபரின் புகைப்படம் வெளியீடு!

8 0

தலங்கம, அக்குரேகொடை பகுதியில் கடந்த 13ஆம் திகதி சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களைக் கைதுசெய்ய மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கமைய, தற்போதைய விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் படி, சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் பற்றிய தகவல்கள் தெரியுமாயின் அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சந்தேகநபர் சுமார் 5 அடி 5 அங்குலம் உயரமுடையவர் எனவும், 44 வயது மதிக்கத்தக்கவராகவும், கருப்பு நிற உடலமைப்பும், மந்தமான மஞ்சள் நிற கண்கள் உடையவர் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

மேலும் சந்தேகநபரின் வலது கன்னத்திற்குக் கீழே முகத்தில் ஒரு வெட்டு காயத்தின் வடு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளில் உருவாக்கப்பட்ட சந்தேகநபரின் தற்போதைய தோற்றத்தின் பல புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி இலக்கங்கள்

பிரதி பொலிஸ் நிலைய தலைவர் \ மேற்கு மாகாண வடக்கு  – 071-8598008

பிரதேச அதிகாரி \ நுகேகொடை – 071-8591641

பணிப்பாளர் \ மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு  – 071-8592279