ரோஹன குமார திஸாநாயக்க அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல்!

274 0

முன்னாள் பிரதியமைச்சர் ரோஹன குமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கட்சியின் தலைமைக்கு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தை ஆகியோர் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நேற்றைய தினம் நீக்கப்பட்டனர்.

இதனையடுத்து மத்திய மாகாண அமைச்சராக இருக்கும் ஜனக பண்டார தென்னக்கோனின் மகனான பிரமித் பண்டார தென்னக்கோன் தமது அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.