மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தாம் பதவியேற்று 10 நாட்களின் பின்னர், திணைக்கள பிரதானிகளுக்கு இடமாற்றம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் மனித வள அபிவிருத்திப் பணிப்பாளராக பணியாற்றிய கல்யாணி குணதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில் நேற்று வாக்குமூலமொன்றைப் பதிவுசெய்தபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
திணைக்கள பிரதானிகள் மட்டுமன்றி, உதவி மற்றும் பிரதிப் பணிப்பாளர் பதவிகளிலும் மாற்றம் ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

