பிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடக்கம்

218 0

பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி வருகிற 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிரான்ஸ் அதிபரின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்க உள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு முதலே பிரான்சில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் தேர்தல் நடைபெறுவதால் பிரான்சில் சற்றே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த முறை தேர்தலில் எம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென், பிராங்கோயிஸ் ஃபிலான், ஜீன் மெலன் சோன், பெனுவா ஹமூன் உள்ளிட்ட 11 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். எனினும் இந்தமுறை பாரம்பரிய அரசியல் கட்சிகளை சாராத வேட்பாளர்களே முதல் இரண்டு இடங்களை பிடிப்பார்கள் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

அதிபர் தேர்தல் 2  கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. மே 7-ல் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிபர்  தேர்தல் நடைபெறுவதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு மக்களும் பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. 2 நாட்களக்கு முன்னர் பாரீசின் வர்த்தக நகரமான சாம்ப்ஸ்-எலிசிஸில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் கத்தியுடன் சென்ற மர்ம நபர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.