சாதிய அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஐந்து பேரை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலுள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றம் ஒன்றினால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த, ஐந்து பேருக்கும் சாதிய அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவர்கள் ஐந்து பேரையும் விடுதலை செய்தது.
அத்துடன், குறித்த தீர்ப்பிற்கு நீதிமன்றம் தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
குற்றத்திற்கான ஆதாரங்கள் இல்லாமல் ஒருவரது சாதி, பின்னணி ஆகியவற்றை வைத்து தண்டனை விதித்தமை அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

